அனைத்து ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்       සියලූ යදම් බිද නැගෙමූ       DEMOLISH ALL OPPRESSION
 
முழுமையான நீதிபதிகள் குழாத்தை நியமிக்குமாறு கோரிக்கை-
Category: NEWS, Posted on: 1/24/2023 12:00:00 AM

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்கு தமக்கெதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட வழக்கை சவாலுக்குட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்காக முழுமையான நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு மனுதாரரான அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ நேற்று(23) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்ல் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அருட்தந்தை சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன ஊடாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவு நாளை மறுதினம்(26) வழங்கப்படும் என சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் நேற்று(23) அறிவித்தது.

மனுதாரரின் இந்த கோரிக்கைக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக மைத்ரிபால சிறிசேன சார்பில் முன்னிலையான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா நீதிமன்றுக்கு தெரிவித்தார்.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தமது காலொன்றை இழந்த நபர் ஒருவர் மற்றும் மனுதாரரான அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ ஆகியோரினால் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த தனிப்பட்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
           

Add a Comment
Name:            
Your Comment:           
                         

View Comments (0)


 


 
<January 2023>
SuMoTuWeThFrSa
25262728293031
1234567
891011121314
15161718192021
22232425262728
2930311234

News Categories
NEWS (25)
ALL

ALL (8009)
More News