அனைத்து ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்       සියලූ යදම් බිද නැගෙමූ       DEMOLISH ALL OPPRESSION
 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் திருவுருவச்சிலை திறந்துவைப்பு-
Category: NEWS, Posted on: 1/23/2023 12:00:00 AM

 

இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் திருவுருவச்சிலை வலிதெற்கு பிரதேச சபைக்கு அருகாமையில் வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் கருணாகரன் தர்சன் அவர்களின் தலைமையில் இன்று திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்வின்போது புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ். புல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா ஆகியோர் சிலையினைத் திறந்துவைத்தார்கள்.
நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ். தேல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறுதிருமுருகன், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன், கட்சி முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.    
           

Add a Comment
Name:            
Your Comment:           
                         

View Comments (0)


 


 
<January 2023>
SuMoTuWeThFrSa
25262728293031
1234567
891011121314
15161718192021
22232425262728
2930311234

News Categories
NEWS (25)
ALL

ALL (8009)
More News