தியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் 48ஆம் வருட நினைவுதின நிகழ்வு உரும்பிராயில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபிக்கு அருகாமையில் இன்றுகாலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இதன்போது நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அன்னாரின் உருவப்படத்திற்கும், உருவச் சிலைக்கும் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் விந்தன் கனகரட்ணம், அனந்த சசிதரன், சிவகுமாரன் அவர்களின் சகோதரி சிவகுமாரி, திரு. நித்தியானந்தன், சு.கிருஷ்ணன், நல்லூர் பிரதேச சபையின் உபதவிசாளர் ஜெயகரன், வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ், பிரதேச சபை உறுப்பினர்கள் இரா.செல்வராஜா, சி.அகீபன், தவநாயகம், ஐங்கரன், திருநாவுக்கரசு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச பொறுப்பாளர் செந்தூரன் ஆகியோரும் சிவகுமாரன் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும்ஊர்ப் பெரியோர்களும் கலந்துகொண்டிருந்தனர்.  
View Comments (0)
|